Purchase @ Amazon

Friday, February 21, 2020

A, B, C வகை பார்வையாளர்கள் (A, B, C Center Audience) யார்? அவர்களால் என்ன நிகழ்ந்தது?

கதைகளை காட்சிபடுத்த உதவியது வீதி மற்றும் மேடை நாடகங்கள். அவை காலப்போக்கில் மனித அறிவின் வளர்ச்சியால் தொழில்நுட்ப ரீதியாக சினிமா என்னும் வடிவம் பெற்றது. சினிமா துவங்கப்பட்டது மேற்கத்திய நாடுகளில் என்றாலும், அது உலகம் முழுவதும் பரவி உலக மக்களை மிகவும் கவர்ந்தது. இயல், இசை, நாடகம் என முத்தமிழும் கொண்டு சிறப்பு பெற்றது நம் மொழி, தமிழ். மொழியை வளர்க்க, மேம்படுத்த சினிமா ஒரு கருவியாக உள்ளது. இத்தமிழ் மண்ணில் சினிமா தன் கால்தடம் பதித்து 100 வருடங்கள் ஆகிவிட்டன. பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரால் பல படைப்புகள் படைக்கபட்டுள்ளன. காலங்கடந்து போற்றபடக்கூடிய சினிமா படங்களும் இங்கு உள்ளன. அவ்வாறு இருப்பின் ஒரு படத்தின் வெற்றி தோல்வியானது, ரசிகர்களாகிய மக்களிடத்தில்தான் உள்ளது. நல்ல கதை, திரைக்கதை, கதையின் கதாபாத்திரத்திற்கு தகுந்த நடிகர்கள், நல்ல கதைக்களம், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைத்தும் சரியாக சிறப்பாக இருப்பின் மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டு கொண்டாடப்படும்.
சினிமாவின் மூலமாக மக்களுக்கு நல்ல கதைகள், கருத்துக்கள், சிந்தனைகளை எளிதாக கொண்டுசெல்ல முடியும். அதனால் சினிமா மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக உருவெடுத்துவிட்டது. இந்த நிலையில் சினிமா அசுர வளர்ச்சி அடைவதற்கான காரணம் முழுக்க முழுக்க மக்களாகிய பார்வையாளகளே, அவர்களே பெரும் ரசனைப் பெற்று ரசிகர்களாக உருவெடுத்தனர். அப்படி இருப்பின் அவர்களை மூன்று வகையாக பிரித்து வேறுபடுத்தினார். A, B, C வகை பார்வையாளர்கள் (A, B, C Center Audience) என்று. 


A வகை பார்வையாளர்கள் : உலக சினிமா என்று போற்றுதலுக்குரிய  கலைக்காக எடுக்கப்படும் திரைப்படங்கள் A வகை பிரிவினரை சேரும். இந்த வகை பார்வையாளர்கள் கலையை, எதார்த்தத்தை மிகவும் விரும்புவார்கள். புதுமையான, புது முயற்சிகள், வெவ்வேறு விதமான கதை உடைய படங்களை பார்க்க விரும்புவார்கள், ரசிப்பார்கள். இவ்வகை பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கும் படங்கள் பல விருதுகளை வென்றுகுவிக்கும் அளவிற்கு இருக்ககூடும். (எ.க) மேற்கு தொடர்ச்சி மலை, TOLET, விசாரணை போன்ற படங்கள். இவைகளே கலையுலகான சினிமாவிற்கு பெரிதும் பெருமை சேர்க்கும். 


B வகை பார்வையாளர்கள் : வியாபார ரீதியாக எடுக்கபப்படும் திரைப்படங்கள் B வகை பிரிவினரை சேரும். இதில் அனைத்து  பார்வையாளர்களுக்கும் தேவையான விடயங்கள் அடங்கியிருக்கும். சண்டைகாட்சிகள், நகைச்சுவை, காதல் காட்சிகள், பாசம், நட்பு என எதார்த்தத்தை மீறி அதிக வசூல் பெறக்கூடிய அளவிற்கு படம் எடுக்கபட்டிருக்கும் அதில் கதையும் சிறப்பாக அமைக்கபட்டிருக்கும். (எ.க) பாகுபலி. தற்போதைய சூழலில் கலையுடன் கூடிய வியாபார ரீதியான படங்கள் வெளிவரத் துவங்கிவிட்டன. அவையும் பெருமளவில் வெற்றியும் பெற்றுகொண்டு இருக்கின்றன. (எ.க) அசுரன், ஆடுகளம், வடசென்னை.

C வகை பார்வையாளர்கள் : நடிகர்களின் ரசிகர்களே பார்வையாளர்களாக இருக்ககூடும். கதை, யதார்த்தம் என எதையும் இவ்வகையினர் பெரிதும் பார்க்க மாட்டார்கள். நடிகர்களின் ரசிகர்களாக படங்களை பெரிதும் கொண்டாடுவர், நடிகர்களுக்கு பெரிதும் பலம் சேர்ப்பர். படம் சரியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் வியாபார ரீதியாக படத்தினை வசூல் ஈட்ட செய்ய உறுதுணையாக இருப்பார். தொடர் பார்வையாளர்கள் (Repeated Audience) என்று சொல்லபடுபவர்களும் இவர்களே. வியாபார ரீதியான படங்கள் இவர்களுக்கு உரியதாக இருக்கும்.
(or)
** Watch this Video **