Purchase @ Amazon

Tuesday, February 28, 2023

விஜய் ஆண்டனி-யின் 'பிச்சைக்காரன் 2' வெளியாகும் தேதி என்ன தெரியுமா?


பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனிக்கு நடிகருக்கான நல்ல வரவேற்பை கொடுத்தது. அதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'பிச்சைக்காரன் 2' வெளியாக தயாராகி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

படக்குழுவினர் இந்த படத்தை ஏப்ரல் 14 வெளியாவாத திட்டமிட்டு அதன் அறிவிப்புகளும் வெளியாகிவிட்டன. அதற்கான போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியீட்டு உள்ளனர். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பொன்னியின் செல்வன் 2ம் பாகம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இதனோடு போட்டியாக பிச்சைக்காரன் 2 வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



Monday, February 27, 2023

'தங்கலான்' படத்தின் புகைப்படங்கள்! | 'Thangalaan' Movie Latest Clicks!

 பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தங்கலான். இந்த படத்தின் படப்பிடிப்பு கோலார் தங்க சுரங்கம் (KGF) இடத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அங்கு எடுத்த புகைப்படங்கள் தற்போது இந்த படத்தின் Update-ஆக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.












'லியோ' படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய கௌதம் மேனன்!


காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இன்று படக்குழுவினர் ஒன்றுகூடி இயக்குனர் கெளதம் மேனனின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'Seven Screen Studio' தற்போது ஒரு புகைப்படத்தை வெளியீட்டு உள்ளது.


அதில் படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் படக்குழுவினர் சேர்ந்து நின்று Cake வெட்டுவதுபோல் இருக்கிறது. ஆனால் தளபதி விஜய் மற்றும் திரிஷா போன்றோர்கள் அந்த புகைப்படத்தில் இல்லை. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. 

இருப்பினும் Update என கேட்டு ஆவலோடு இருந்த ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இன்றைக்கான Update கிடைத்துள்ளது. மேலும் அந்த புகைப்படம் பலராலும் பகிரப்பட்டுவருகிறது. 

Tweet Link: Gautam Menon - Birthday Celebration - Tweet from Seven Screen Studio

Sunday, February 26, 2023

நடிகர் விக்ரம் பிரபுவின் மனைவி யார் தெரியுமா? திருமணத்தின் போது அவர் எப்படி இருந்தார் தெரியுமா?



நடிப்பு திலகம் சிவாஜிகணேசனின் மகனான நடிகர் பிரபுவின் மகன் நடிகர் விக்ரம் பிரபு. இவர் தமிழ் சினிமாவில் 2012-ல் 'கும்கி' படம் மூலம் அறிமுகமானவர். இந்த படம் வெளியாகி 11 வருடங்கள் ஆனா நிலையில், இதை அடுத்து பல நல்ல படங்கள் வந்திருந்தாலும் அவருக்கு பெரும் அளவில் மக்களிடத்தில் வரவேற்பு கிடைக்கவில்லை. 

கடந்த வருடம் 2022-ல் டனக்காரன் மற்றும் பொன்னியின் செல்வன் என இவருக்கு இரண்டு படங்கள் வெளியான நிலையில், அது அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். மேலும் பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் நடித்திருக்கிறார். இந்த ஆண்டு 2023-ல் படம் வெளியாக இருக்கிறது. 'பாயும் ஒளி நீ எனக்கு' மற்றும் 'ரெய்டு' என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். 

26.02.2007-ல் இவருக்கு திருமணம் சிறப்பாக நடைபெற்றது.  அவரது மனைவியின் பெயர் லட்சுமி. இவர்களது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைபடம் தற்போது சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. திருமண புகைப்படத்தில் பார்க்கும்போது விக்ரம் பிரபு 'Chocolate Boy' போல காட்சியளிக்கிறார் என்று சொல்லபடுகிறது. 26 பிப்ரவரி 2003 ஆன இன்று அவர்களுடைய 16 ஆம்  ஆண்டு திருமண நாள். அவர்களுக்கு எங்களது சார்பாக நல்வாழ்த்துக்கள்.


Viral ஆகும் விஜய் த்ரிஷாவின் latest புகைப்படம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்து வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படப்பிடிப்பிற்காக லியோ படத்தின் குழுவினர் அனைவரும் காஷ்மீருக்கு சென்றுள்ளனர். படப்பிடிப்பு நல்லமுறையில் சரியான திட்டமிடலுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் அவ்வப்போது படக்குழுவினர் எவரேனும் புகைப்படத்தை வெளியீட்டுகொண்டுதான் இருக்கின்றனர். மிகவும் ஆர்வமுள்ள ரசிகர்கள் Update வேண்டும் என்று கேட்கின்றனர். இதனால் Fan Theory என்று சொல்லக்கூடிய ரசிகர்களால் உருவாக்கப்படும் படத்தை சார்ந்த கட்டுக்கதைகள் பெருமளவில் சமூக வலைத்தளங்களில் சுவாரசியமாக பகிரப்பட்டு Viral ஆகி வருகிறது. 

அப்படி இருக்கும் சூழலில் விஜய் த்ரிஷா இருவரும் ரசிகை ஒருவரோடு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தை பார்க்கும்போது காஷ்மீருக்கு செல்லும்போது வானூர்தியில் எடுத்துக்கொண்ட புகைப்படம் போல் தெரிகிறது. 



'விண்ணைத்தாண்டி வருவாயா' வெளியாகி 13 வருடம்! - வெறித்தனமாக Twitter-ல் Trend செய்யும் ரசிகர்கள்


 2010 ஆம் ஆண்டு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியானது 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம். முழுக்க முழுக்க Romance Genre-ல் உருவான திரைப்படம், பெருமளவில் ரசிகர்களால் காதலர்களால் கொண்டாடப்பட்டது. 

ஏ.ஆர். ரஹ்மான் இசை படத்திற்கு பக்கபலமாக இருந்து படத்தை வசூல் ரீதியாக Super Hit படமாக அமைத்தது. இந்த படம் Re-Release ஆகியும் பலரால் மீண்டும் பெரிதும் ரசித்து பார்த்து கொண்டாடப்பட்டது. 


பெரும் வெற்றிப்படமாக அமைந்த இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத படமாக உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகி 13 ஆண்டுகளை கடந்துள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல தரப்பு மக்கள் இந்த படத்தை Twitter-ல் #13YearsOfVTV #VinnaithaandiVaruvaayaa என்ற Hash Tag-களில் Trend செய்து வருகின்றனர்.  

PVR VR Mall-ல் இந்த படத்தின் சிறப்பு காட்சி ஒளிபரப்படுகிறது. மார்ச் 01 ஆம் தேதி வரை படத்தின் காட்சி இருக்கும் என்று Tickets New இணையதளத்தில் பார்க்கமுடிகிறது. திரையரங்கில் சென்று பார்க்க விரும்புபவர்கள் பார்த்து மகிழுங்கள். 



Saturday, February 25, 2023

வலிமை படம் - ஒரு வருடம்! - Remembering the Trended Hashtag #ValimaiUpdate


'வலிமை' படம் வெளியாகி இன்றோடு ஒரு வருடம் நிறைவானது. தமிழ் சினிமாவில் உலக அளவில் படத்தின் அப்டேட் (#ValimaiUpdate) கேட்டு மிகவும் பிரபலமாகி ட்ரெண்ட் ஆனா திரைப்படம். அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதத்தில் அமைந்த திரைப்படம். 

ஆக்ஷன் காட்சிகளை உலக தரத்திற்கு உருவாக்கி மிரட்டி இருந்தார்கள். படித்து முடித்த இளைஞர்கள் வேலை கிடைக்காத சூழலில் எப்படி பாதை மாறி சென்று சமூகத்தில் குற்றங்களை செய்கிறார்கள் என்பதை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டிய படம். 

Tweet Link: Valimai Editor - Vijay Velukutty Tweeted about 1 Year of Valimai

தவறான விமர்சனங்களை சிலர் கொடுத்திருந்தாலும், பலரால் பெரிதும் பாராட்டப்பட்டது. 2022-ல் அதிக வசூல் ஈட்டிய படங்களில் வலிமையும் ஒன்று. 230 கோடி ரூபாய் வசூல் எடுத்து அனைத்து தரப்பினருக்கும் நல்ல லாபத்தை தந்தது என்றே சொல்லலாம். 

Tweet Link: Valimai Actor - Kartikeya Tweeted about 1 Year of Valimai


படம் வெளிவந்து 1 வருடம் ஆனா நிலையில், #1YearOfBlockbusterValimai #1YearOfValimai என்று அஜித் ரசிகர்களும், பல தரப்பினரும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்கின்றனர். படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் தங்கள் நினைவுகளை அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

Tweet Link: Valimai Cinematographer - Nirav Shah Tweeted about 1 Year of Valimai

Friday, February 24, 2023

லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி அடுத்து கொடுக்க போகும் அப்டேட் என்னவாக இருக்கும்??


லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் முதலாளியான லெஜெண்ட் சரவணன் 'தி லெஜெண்ட்' படத்தில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். 

அதனை தொடர்ந்து அவரை சார்ந்த அரசியல் சர்ச்சை ஒன்று கிளம்பியது பல் நாட்களுக்கு முன்பு. அதற்கு அவர் பதில் தெரிவித்திருந்த நிலையில். அதை தொடர்ந்து வேறு எதுவும் அரசியல் சார்ந்த விசயத்தை பேசவில்லை.  


சில தினங்களுக்கு முன்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை ட்வீட் செய்து இருந்தார். அது காஷ்மீரில் 'தி லெஜெண்ட்' படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காணொளியாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அல்லது வேறு புது படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றிருக்கலாம் என்று சொல்லபடுகிறது.

Tweet Link: Legend Saravanan - Kashmir Resort Room Tour Video


அதை தொடர்ந்து இன்று ஒரு ட்வீட் செய்திருந்தார் அதில் "காத்திருந்தது அருகில் வந்துவிட்டது. சில நாட்களில் சுவாரசியமான அப்டேட் வழங்கப்படும்" என்று குறிப்பிட்டு இருந்தார். அவரது ட்வீட் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Tweet Link: Legend Saravanan - New Update - Arrival

Thursday, February 23, 2023

சிவகார்த்திகேயன் இயக்குனராக களத்தில் இறங்கி கலக்க இருக்கிறார்!



தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர். இவர் சின்னத்திரை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து, பெரிய திரையில் நடிகராக மாறி, பின் பாடகராக, பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். 



அனைத்து குடும்பங்களுக்கும் பிடித்த நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன் வருங்காலத்தில் இயக்குனராக களம் இறங்க உள்ளார்.


இது குறித்து இந்தய கிரிக்கெட் வீரர் பவுலர் நட்ராஜன் ஒரு நேர்காணலில் கூறுகையில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை கிரிக்கெட்-ல் இருந்து ஓய்வு பெற்ற பின்பு படமாக எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளேன் என்று கூறியுள்ளார். அந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் இயக்கி தன்னுடைய கதாபாத்திரத்தில் அவரே நடிப்பார் என்று தெரிவித்து உள்ளார்.

தற்போது சந்தானம் வாங்கும் சம்பளம் இதுவா?


தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்துவந்த சந்தானம். பின் கதையின் முழு கதாநாயகனாக இறங்கி நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான 'குலு குலு', 'ஏஜென்ட் கண்ணாயிரம்' தோல்வி அடைந்தது.

அடுத்ததாக இவர் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் 'கிக்'. அதைத்தொடர்ந்து அவரிடம் பல படங்கள் கைவசம் உள்ளது.

இப்படி இருக்கும் சூழலில் தற்போது சந்தானத்தின் சம்பளம் என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி இப்போது நடிக்கும் புதிய படத்தில் ரூ.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அதுவும் 'Single Payment'-ஆக தான் வாங்கியிருக்கிறார்.