Purchase @ Amazon

Wednesday, December 14, 2022

AR ரகுமான் வெளியிட்ட Unseen Video - ரஜினிகாந்திற்கு Surprise கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு இசையமைப்பாளர் AR ரகுமான் வாழ்த்து மட்டும் தெரிவிக்காமல் அவருக்கு surprise-ஆக ஒரு video வெளியிட்டார்.

இசையமைப்பது மட்டுமல்லாமல் கடந்த 2019 ஆம் ஆண்டு 99 songs என்னும் ஒரு படத்திற்கு எழுத்தாளராக இருந்தார் AR ரகுமான். இப்போது Le Musk என்னும் Virtual Reality-க்கு ஏற்றவாறு ஒரு படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியீட்டு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது இதனை சிறப்பு திரையிடலாக நடிகர் ரஜினிகாந்திற்கு திரையிட்டு காண்பித்தார். அதை பார்த்த சூப்பர் ஸ்டார் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த video-வில் நடிகர் ரஜினிகாந்த் 'ஓ மை காட், என்ன பண்ணி வச்சிருக்கீங்க - Mind Blowing' என்று அவர் கூறியுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

AR ரகுமான் வெளியீட்ட வீடியோவின் ட்வீட்-ன் link கீழே உள்ளது.

AR Rahman's Tweet - Unseen Video - Surprised Rajinikanth on His Birthday


Tuesday, December 13, 2022

ஜெயிலர் படத்தின் 'Short Glimpse' வெளியானது!

சூப்பர் ஸ்டாரின் பிறந்த தினமான நேற்று (12-12-2022) உலகளவில் இருந்து பலரால் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறப்பட்டன சமூக வலைத்தளங்கள் மூலமாக. அவர் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துக்கொண்டிருக்கும் அடுத்த படமான நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தின் 'Short Glimpse' வெளியாயின.


அதில் சூப்பர்ஸ்டார் தன்னுடைய ஸ்டைலை Drama Genre-க்கு ஏற்றாற்போல் யதார்த்தமாக வெளிப்படுத்தி உள்ளார். பார்ப்பதற்கு மாஸ்-சாகவும் கிளாஸ்-சாகவும் உள்ளது. அந்த 'Short Glimpse'-ன் link கீழே உள்ளது.

Jailer - Short Glimpse (Click Here To Watch The Video)

Jailer Short Glimpse Review/Breakdown - (Click Here To Watch The Video)

Monday, December 12, 2022

அனல் பறக்கும் விஷாலின் 'லட்டி' டிரைலர்


விஷால் காவல்துறை அதகாரியாக நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் லட்டி. இந்த படத்தை விஷாலே தயாரித்துள்ளார். சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். சாம் CS இசையமைத்து உள்ளார். A. வினோத் குமார் இயக்கியுள்ளார்.

ஏற்கெனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று ஹைப்பை உருவாக்கி இருக்கிறது.


இதை தொடர்ந்து இன்று டிரைலர் வெளியாகி இருக்கிறது. விஷால் மாஸ்-ஆக நடித்துள்ளார். அனல் பறக்கும் சண்டை காட்சிகள் தெரிக்க விட்டிருக்கிறது. நல்ல  காவல்துறை கதை அம்சம் உள்ள குடும்பத்தோடு பார்த்து மகிழக் கூடிய படமாக இருக்கிறது டிரைவரை பார்க்கும் போது. விஷால் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

பட்டயகிளப்பும் 'வாரிசு' படத்தின் Vera Level Promotions

வருகின்ற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளி வர இருக்கிறது தளபதி விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம். இந்த படத்தை வம்சி இயக்கியிருக்கிறார்.
இந்த படத்திற்கான Promotions மிகவும் சிறப்பாக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 

படத்தின் Promotions மேலும் வலுப்பெற சிறப்படைய மெட்ரோ ரயிலில் வாரிசு படத்தின் மிக நீளமான போஸ்டர்-ஐ ஒட்டியுள்ளனர். சென்னை நகரம் முழுவதும் இந்த மெட்ரோ ரயில் வலம்வருதை பார்க்கும்  போது மிகவும் Mass-ஆக கண் கவரும் விதத்தில் அமைந்துள்ளது. இதை பார்த்து தளபதி விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 


வெளியானது சர்தார் படத்தின் Make Over வீடியோ!



மக்களின் மிகுந்த பாராட்டையும் ஆதரவையும் பெற்று திரையரங்கில் மிகவும் வெற்றிகரமாக ஓடியது சர்தார் திரைப்படம். இந்தப் படம் ஆஹா (Aha!) OTT தளத்தில் நவம்பர் 18 ஆம் தேதி வெளியானது.


OTT தளத்திலும் அதிக பார்வைகளோடு மிகுந்த வரவேற்பையும் பெற்றிருந்தது இந்த படம். இதையடுத்து படக்குழுவினர் மற்றும் OTT நிறுவனமும் இணைந்து கார்த்தி நடத்த அந்த SPY கதாபாத்திரத்திற்கு உண்டான Make-up பற்றிய வீடியோ ஒன்றை அவர்களின் Youtube channel-ல் வெளியீட்டு இருக்கிறது. அந்த வீடியோவின் link கீழே உள்ளது

 Sardar Make Over Video

PAN India Release-ஆக உருவெடுக்கும் கார்த்திக் சுப்புராஜின் Jigarthanda Double X - நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த தினமான இன்று படப்பிடிப்பு துவங்கியது!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தாண்டா திரைப்படம் மாபெரும் வெற்றியைப்பெற்றது. தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதில் 'Asault சேது' கதாபாத்திரத்தில் நடித்த பாபி சிம்ஹா-விற்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படம் ஒரு 'Trend Setter' படமாக அமைந்தது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'ஜிகர்தண்டா டபுள் X' திரைப்படத்தின் முன்னோட்ட டீஸர் வெளியாகி பட்டையை கிளப்புகிறது. 
 
 
இதில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இதற்கு முன்பு கார்த்திக் சுப்புராஜ்-உடன் SJ சூர்யா கூட்டணி அமைத்து இறைவி படத்தில் நடித்துள்ளார். அந்த கதாப்பாத்திரம் அவருக்கு நடிகருக்கான, வில்லன் நடிகருக்கான நல்ல அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த ஜிகர்தண்டா டபுள் X படத்தில் கார்த்திக் சுப்புராஜ், SJ சூர்யாவோடு புதியதாக கூட்டணி சேர உள்ளார் ராகவா லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த படத்தின் படப்பிடிப்பு நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று (12-12-2022) துவங்க உள்ளது என்று கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்தார். இந்த படம் பல மொழிகளில் வெளியாகக்கூடிய PAN இந்தியா படமாக உருவெடுக்க உள்ளது.

தளபதி விஜய் யோகிபாபுக்கு கொடுத்த 'Surprise Gift'

தமிழ் சினிமாவில் முன்னனி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. இவர் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்த 'மண்டேலா' படம் மாபெரும் வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது.

பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள அவர் ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் விளையாடி மகிழ்கிறார். அவருடைய கிரிக்கெட் விளையாடும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பார்க்ப்பட்டுவருகிறது.

இவரது விளையாட்டை பார்த்த தளபதி விஜய், இவருக்கு Bat ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இதைப்பற்றி யோகி பாபு தளபதி விஜய் பரிசாக அளித்த Bat உடன்  இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் 'இந்த Bat விஜய் அண்ணா கொடுத்த Surprise Gift அவருக்கு ரொம்ப Thanks'. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு Viral ஆகி வருகிறது.

Sunday, December 11, 2022

அஜித்தின் துணிவு பட முதல் பாடல் 'சில்லா சில்லா' முதலிடம்!

சில தினங்களுக்கு முன்பே இணையத்தில் Leak-ஆன அஜித்தின் துணிவு பட பாடல் 'சில்லா சில்லா'. படக்குழுவினர் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் படக்குழுவினர் குறிப்பிட்ட சரியான நேரத்தில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. இப்போது பட்டித்தெட்டி எங்கும் பட்டைய கிளப்ப தொடங்கி விட்டது. 

தற்போது YouTube Trending-ல் முதல் இடத்தில் உள்ளது இந்த பாடல். அதற்குள்ளாக1.3 கோடி Views-களை அள்ளியுள்ளது.
படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பாடலை பாடி  இருக்கிறார்கள் அனிருத், வைசாக், ஜிப்ரான்.
பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார் வைசாக. மக்களுக்கு கருத்து சொல்லும் விதமாக ஊக்குவிக்கும் விதமாக இந்த பாடல் வரிகள் அமைந்திருக்கிறது. இந்த பாடலுடைய Lyrical Video மற்றும் Making Video -வின் Link கீழே உள்ளது.


Wednesday, December 7, 2022

 'சர்தார்' வெற்றி கொண்டாட்டத்தில் நடிகர் கார்த்தி செய்த செயல்!

கார்த்தி நடித்த சர்தார் படம் இந்த 2022 தீபாவளி அன்று வெளியானது. இந்த படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'சர்தார் 2'-வின் பணிகளை தொடங்கவுள்ளது படக்குழு.

படத்தில் நெகிழி போத்தல்களை (Plastic Bottle) பயன்படுத்தாதீர்கள் என்ற கருத்தை தெளிவான விளக்கத்தோடு முன்வைத்தது இந்த படம். ஏற்கனவே படத்தை விளம்பரம் செய்யும் நிகழ்ச்சியில் நெகிழி போத்தல்களுக்கு பதிலாக கண்ணாடி போத்தல்களை பயன்படுத்தினர். 

அது மட்டுமல்லாமல் கார்த்தி ஒரு நேர்காணலில் கூறுகையில், சர்தார் படத்தின் கதையை கேட்ட பின்பு தான் வெளியே செல்லும் போது தண்ணீர் குடிப்பதற்கு 10 லிட்டர் எவர் சில்வர் டிஸ்பென்சரை கூடவே எடுத்துச் செல்வதாக கூறினார். தண்ணீர் குடிக்க முற்றிலுமாக நெகிழி போத்தல்களை தவிர்ப்பகாகவும் கூறினார். இவருக்கு முன்பே இவரது மனைவி இதை சரியாக பின்பற்ற தொடங்கிவிட்டார் என்றும் குறிப்பிட்டார்.

இதன் தொடர்ச்சியாக படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கார்த்தி படத்தில் பணியாற்றிய PS மித்ரன் உட்பட அனைவருக்கும் 'வெள்ளி தண்ணீர் போத்தலை' (Silver Water Bottle) பரிசாக வழங்கியுள்ளார். இதன் மதிப்பு 30,000 ரூபாய் என குறிப்பீட்டு உள்ளனர். வெற்றி கொண்டாட்டத்தில் கார்த்தி செய்த இந்த சிறப்பான நற்செயலால்  படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.