Purchase @ Amazon

Tuesday, March 28, 2023

GV பிரகாஷ் கொடுத்த Captain Miller பற்றிய வெறித்தனமான Update!

தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் Captain Miller. 

ஒரு Periodical Film Genre-ல் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் GV பிரகாஷ். தற்போது இந்த படத்தை பற்றி ஒரு Update-ஐ அவர் கொடுத்துள்ளார். 

அதில் அவர் கூறுவது "ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உள்ள Celebration of life பிண்ணனி இசைக்கு அடுத்த படியாக இந்த Captain Miller படத்தில் படமாக்கிய குறிப்பிட்ட காட்சிகளுக்கு 3, 4 முறை பிண்ணனி இசையை சரியாக பொருந்தும் அளவுக்கு வடிவமைத்துள்ளேன். வெறித்தனமான பிண்ணனி இசை அனைவரையும் வியப்படைய செய்ய போகிறது" என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரியா நடிப்பில் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'

ஆரியா நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.

இந்த படத்தை இயக்குகிறார் கொம்பன், விருமன் படத்தின் இயக்குனர் முத்தையா. GV பிரகாஷ் இசையமைக்கிறார். கிராமத்து பிண்ணனியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பெருமளவில் ரசிகர்களை கவரும் விதத்தில் இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

இந்த படத்தின் Poster ஒன்றை வெளியிட்டு உள்ளது படக்குழு. இந்த படத்தின் டீசர் வரும் மார்ச் 31 அன்று வெளியிடப்படும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் - 2 பாடல் மற்றும் டிரைலர் வெளியிட்டு விழாவில் நடிகர் கமலஹாசன்

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் நடிகர் கமலஹாசன் படத்தின் தொடக்கத்தில் பின்னணியில் கதை சொல்வது போன்று இருக்கும். இதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2-ல் அது போன்று கதை சொல்லுவாரா என்பது தெரியவில்லை. வேறு ஏதேனும் பங்களிப்பு இருக்குமா என்பதும் தெரியவில்லை.

இருப்பினும் இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியிட்டு விழாவிற்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து உள்ளனர். வெளியிட்டு விழா மார்ச் 29 ஆன நாளை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அவரேடு வேறு யாரெல்லாம் வருவார்கள் என்பதை நாளை நிகழ்ச்சியை பார்த்தால்தான் தெரியும்.



பொன்னியின் செல்வன்-2 படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது!

பொன்னியின் செல்வன் முதல் பாகம் சென்ற வருடம் வெளிவந்து மாபெரும் வெற்ற படமாக அமைந்தது. அதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் ஏப்ரல் 28-ல் வெளியாக இருக்கிறது. படத்தின் Post Production வேலைகள் மிகவும் வேகமாக நடை பெற்று வந்த நிலையில் படத்தின் முதல் பாடலான 'அக நக' வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் நடித்த கதாப்பாத்திரங்கள் உடுத்தும் உடைகளை பற்றி காணொளிகளை வெளியிட்டது படக்குழு சில தினங்களுக்கு முன்பு. தற்போது இந்த படத்தின் டிரைலரை நாளை வெளியிடுவதாக முடிவெடுத்துள்ளது படக்குழு. அவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தது என்னவென்றால் "மீண்டும் வந்தியத்தேவன் நம்முடைய இதயங்களை கொள்ளையடிக்க வருகிறார் இந்த முறையும்" என்பதை குறிப்பிட்டு இருந்தனர்.






புல்லாங்குழல் இசைக் கலைஞர் சுதாகர் காலமானார்!


புல்லாங்குழல் இசைக் கலைஞர் சுதாகர் காலமானார். இவர் இசைஞானி இளையராஜாவின் பல பாடல்களில் புல்லாங்குழல் கலைஞராக பணியாற்றியுள்ளார். கண்ணே கலைமானே, பனிவிழும் மலர்வளம், இளைய நிலா பொழிகிறதே, அழகிய கண்ணே, நாதம் என் ஜீவனே உள்ளிட்ட புகழ் பெற்ற பல பாடல்களில் இவர் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சசிக்குமார் கோயிலில் சுவாமி தரிசனம்!

சில நாட்களுக்கு முன்பு நடிகர் சசிகுமார் நடித்திருந்த அயோத்தி படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மூன்று தினங்களுக்கு முன்பு இந்த படம் வெளியாகி 25 நாட்களை கடந்தது. இந்த நிலையில் சசிகுமார் திருவள்ளுரில் உள்ள கூவம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரிப்புரசுந்தரி உடனுறை திருபுராந்தக சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவர் பூ மற்றும் பிரசாதப் பையை அர்ச்சகரிடமிருந்து வாங்குவது போல் உள்ள புகைப்படத்தை அந்த கோயில் நிர்வாகம் தங்களுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். அதனை சசிகுமார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.