Purchase @ Amazon

Sunday, February 26, 2023

'விண்ணைத்தாண்டி வருவாயா' வெளியாகி 13 வருடம்! - வெறித்தனமாக Twitter-ல் Trend செய்யும் ரசிகர்கள்


 2010 ஆம் ஆண்டு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியானது 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம். முழுக்க முழுக்க Romance Genre-ல் உருவான திரைப்படம், பெருமளவில் ரசிகர்களால் காதலர்களால் கொண்டாடப்பட்டது. 

ஏ.ஆர். ரஹ்மான் இசை படத்திற்கு பக்கபலமாக இருந்து படத்தை வசூல் ரீதியாக Super Hit படமாக அமைத்தது. இந்த படம் Re-Release ஆகியும் பலரால் மீண்டும் பெரிதும் ரசித்து பார்த்து கொண்டாடப்பட்டது. 


பெரும் வெற்றிப்படமாக அமைந்த இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத படமாக உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகி 13 ஆண்டுகளை கடந்துள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல தரப்பு மக்கள் இந்த படத்தை Twitter-ல் #13YearsOfVTV #VinnaithaandiVaruvaayaa என்ற Hash Tag-களில் Trend செய்து வருகின்றனர்.  

PVR VR Mall-ல் இந்த படத்தின் சிறப்பு காட்சி ஒளிபரப்படுகிறது. மார்ச் 01 ஆம் தேதி வரை படத்தின் காட்சி இருக்கும் என்று Tickets New இணையதளத்தில் பார்க்கமுடிகிறது. திரையரங்கில் சென்று பார்க்க விரும்புபவர்கள் பார்த்து மகிழுங்கள். 



No comments:

Post a Comment