Purchase @ Amazon

Sunday, February 26, 2023

நடிகர் விக்ரம் பிரபுவின் மனைவி யார் தெரியுமா? திருமணத்தின் போது அவர் எப்படி இருந்தார் தெரியுமா?



நடிப்பு திலகம் சிவாஜிகணேசனின் மகனான நடிகர் பிரபுவின் மகன் நடிகர் விக்ரம் பிரபு. இவர் தமிழ் சினிமாவில் 2012-ல் 'கும்கி' படம் மூலம் அறிமுகமானவர். இந்த படம் வெளியாகி 11 வருடங்கள் ஆனா நிலையில், இதை அடுத்து பல நல்ல படங்கள் வந்திருந்தாலும் அவருக்கு பெரும் அளவில் மக்களிடத்தில் வரவேற்பு கிடைக்கவில்லை. 

கடந்த வருடம் 2022-ல் டனக்காரன் மற்றும் பொன்னியின் செல்வன் என இவருக்கு இரண்டு படங்கள் வெளியான நிலையில், அது அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். மேலும் பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் நடித்திருக்கிறார். இந்த ஆண்டு 2023-ல் படம் வெளியாக இருக்கிறது. 'பாயும் ஒளி நீ எனக்கு' மற்றும் 'ரெய்டு' என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். 

26.02.2007-ல் இவருக்கு திருமணம் சிறப்பாக நடைபெற்றது.  அவரது மனைவியின் பெயர் லட்சுமி. இவர்களது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைபடம் தற்போது சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. திருமண புகைப்படத்தில் பார்க்கும்போது விக்ரம் பிரபு 'Chocolate Boy' போல காட்சியளிக்கிறார் என்று சொல்லபடுகிறது. 26 பிப்ரவரி 2003 ஆன இன்று அவர்களுடைய 16 ஆம்  ஆண்டு திருமண நாள். அவர்களுக்கு எங்களது சார்பாக நல்வாழ்த்துக்கள்.


No comments:

Post a Comment