Purchase @ Amazon

Sunday, March 5, 2023

லியோ படத்திற்காக பயன்படுத்தப்போகும் கேமரா இதுவா?


தளபதி விஜய், அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் நடைபெறும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னைக்கு படக்குழு திரும்புவதாக கூறப்படுகிறது. சென்னையிலேயே அடுத்தகட்ட படப்பிடிப்புகள் நடைபெறும் என கூறப்படுகிறது.


இந்த நிலையில் நடிகர் அர்ஜுன், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கெளதம் மேனன் தங்களுடைய படப்பிடிப்பு முடிந்து விட்டதால் முன்பே சென்னை திரும்பினர். தற்போது படத்தினுடைய First Look Poster-ஐ எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்கள்.

தொடர்ச்சியாக படவேலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், படத்திற்கான Update-ஐ வெளியீட்டு கொண்டே உள்ளனர் படக்குழுவினர். அதன்படி லியோ படத்தில் பயன்படுத்தப்படும் Camera என்ன என்பதை தற்போது வெளியீட்டுள்ளது படக்குழு. 


V Raptor XL Red Camera-வை வைத்துதான் லியோ படத்தை எடுக்கிறார்கள். Hollywood திரையுலகில் அதிகம் பயன்படுத்துக்கூடிய Camera இது. சமீபத்தில் வெளியான விஜய்-ன் Beast படத்தை இந்த Camera-வில் தான் படமாக்கினார்கள். Beast படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பரம்ஹம்சா தான் லியோ படத்திற்கும் ஒளிப்பதிவாளராக உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. 


Tweet Link: Camera Use to Shoot 'Leo' - Video

 

No comments:

Post a Comment