Purchase @ Amazon

Tuesday, March 28, 2023

பொன்னியின் செல்வன்-2 படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது!

பொன்னியின் செல்வன் முதல் பாகம் சென்ற வருடம் வெளிவந்து மாபெரும் வெற்ற படமாக அமைந்தது. அதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் ஏப்ரல் 28-ல் வெளியாக இருக்கிறது. படத்தின் Post Production வேலைகள் மிகவும் வேகமாக நடை பெற்று வந்த நிலையில் படத்தின் முதல் பாடலான 'அக நக' வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் நடித்த கதாப்பாத்திரங்கள் உடுத்தும் உடைகளை பற்றி காணொளிகளை வெளியிட்டது படக்குழு சில தினங்களுக்கு முன்பு. தற்போது இந்த படத்தின் டிரைலரை நாளை வெளியிடுவதாக முடிவெடுத்துள்ளது படக்குழு. அவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தது என்னவென்றால் "மீண்டும் வந்தியத்தேவன் நம்முடைய இதயங்களை கொள்ளையடிக்க வருகிறார் இந்த முறையும்" என்பதை குறிப்பிட்டு இருந்தனர்.






No comments:

Post a Comment